யாழ் வடமராட்சி கிழக்கில் நாகர்கோவில் சந்தி ஊடாக தென்மராட்சி எழுதுமட்டுவாளை இணைக்கின்ற வீதி சுமார் ஆறுபது ஆண்டுகளுக்கு மேலாக திருத்தப்படாமல் காணப்படுகிறது. ஒருவருடத்தில் ஆறுமாதங்கள் பயணிக்க கூடியதாகவும் ஆறுமாதங்கள் பயணிக்க முடியாதவாறு மழை வெள்ளம் தேங்கிக் காணப்படும் குறித்த வீதியானது குடத்தனை, அம்பன், நாகர்கோவில் குடாரப்பு மாமுனை மக்களிற்க்கான அவசர வெளியேற்ற பாதை என்பதுடன் ஏ ஒன்பது வீதியை அடைவதற்கான மிகவும் கிட்டிய பாதையாகும். குறித்த வீதி சுமார் ஏழு கிலோமீட்டர் தூரம் கொண்டாலும், இதில் சுமார் மூன்று கிலோமீட்டர் வரை திருத்தப்படாதும் பாலம் புனரமைக்காதும் காணப்படுவதால் பருவகால மழை ஆரம்பித்தது முதல் ஆறுமாதங்கள் எந்த வித வாகனங்களுக்கு செல்ல முடியாதவாறு நீரால் மூழ்கி பயணம் தடைப்பட்டுவிடும், இதனால் பிரதேச மக்கள் மருதங்கேணி புதுக்காடு பாதை ஊடாக சுமார் 30 கிலோமீட்டர் அதிகாமாகவோ அல்லது வல்லிபுரம் முள்ளிச்சந்தி ஊடாக கொடிகாமம் ஊடாக சுமார் 25 கிலோமீட்டர் அதிகமாக பயணிக்க வேண்டிய நிலையிலேயே உள்ளனர்.
குறித்த பாதை இடர்காலத்தில் விரைவாக வெளியெருவதற்க்கு அத்தியாவசியமானதென்பதுடன் வியாபாரிகள், உட்பட நாளாந்தம் நூற்றுக்கணக்கானவர்கள் சென்றுவரக் கூடிய குறித்த வீதியை திருத்தித் தருமாறு மக்கள் பல தடவைகள் ஒருங்கிணைப்பு கூட்டம்,பிரதேச செயலர் மாவட்ட செயலர் உட்பட பல இடங்கிலும் முறையீடு செய்தும் இதுவரை எந்தவித பலனும் கிட்டவில்லை என பிரதேச வாசிகள்