எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பு

எரிவாயு விலை குறைப்பு தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.

எரிவாயு விலை குறைக்கப்படும் என்ற அறிப்பைத் தொடர்ந்து, சில விநியோகஸ்தர்களும் சரக்கு சேகரிப்பாளர்களும் எரிவாயுவை கொள்வனவு செய்ய தயங்குகின்றனர் என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிவாயு விலை குறைக்கப்படும் என்ற அறிப்பைத் தொடர்ந்து, சில விநியோகஸ்தர்களும் சரக்கு சேகரிப்பாளர்களும் எரிவாயுவை கொள்வனவு செய்ய தயங்குகின்றனர்.

இதேவேளை புதிய எரிவாயு தொகுதிகள் துறைமுகங்களை அடையும் வரை, எதிர்வரும் மாதங்களில் எரிவாயு விநியோகம் நடைபெறாது எனும் வதந்திகளை பரப்பவும் ஆரம்பித்துள்ளனர்.

மேலும், தேவைக்கேற்ற எரிவாயு கையிருப்பில் உள்ளது. எனினும் நட்டம் ஏற்படும் என்ற பயத்தில் விநியோகஸ்தர்கள், சிலிண்டர்களை கொள்வனவு செய்து சேமிக்கத் தயங்குகின்றனர். சில விநியோகஸ்தர்களின் நடத்தை குறித்து நிறுவனத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

உலக சந்தை நிலவரம் கடந்த மாதத்தைப் போலவே உள்ளதால், அதைக் கொண்டு தற்போதைக்கு விலைகளை கணிக்க முடியாது. இருப்பினும் எரிவாயு திருத்தம் குறித்த மற்றோர் அறிவிப்பு நாளை(29) வெளியிடப்படும்.

உலக சந்தையின் எரிவாயு விலையில் நேற்றையதினம் (27) வரை குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படவில்லை. சில சந்தர்ப்பங்களில் எரிவாயு விலைகள் குறையாமல் அல்லது கூடாமல் தற்போது காணப்படும் விலையிலே இருக்கலாம்.

மேலும் நவம்பர் 2 மற்றும் 6ஆம் திகதிகளில் எரிவாயுக் கப்பல்கள் நாட்டை வந்தடையும்.”என கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: admin