
யாழ். இணுவில் பகுதியில் 17 வயதுடைய இளைஞன் மீது வாள்வெட்டுத் தாக்குதல் நடத்திய சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்த கைது நடவடிக்கை நேற்று (27.10.2022) முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்த சம்பவத்தில் ஆவா என அழைக்கப்படும் வினோதன் என்பவறே பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சந்தேகநபர் நீதிமன்றுக்கு சென்று திரும்பிய வேளை கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீபாவளி தினமான கடந்த 24ஆம் திகதி இணுவில் வீதியில் சென்ற 17 வயதுடைய ஒருவரை வழிமறித்த நால்வர் வாள்வெட்டுத் தாக்குதலை நடத்திவிட்டுத் தப்பித்துள்ளனர்
வாள்வெட்டுக்கு இலக்கானவர் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார்.
வாள்வெட்டுக்கு இலக்கானவர் ஆவா என அழைக்கப்படும் வினோதனும் வந்திருந்தார் என்று வாள்வெட்டுக்குள்ளானவர் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
அதனடிப்படையில் பொலிஸாரினால் தேடப்பட்டு வந்த சந்தேகநபர் இன்று பிற்பகல் நீதிமன்றிலிருந்து வெளியேறிய நிலையில் கைது செய்யப்பட்டதுடன் வாள் ஒன்றும் அவரிடம் கைப்பற்றப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.