உயிரை பறிக்கும் மாத்திரை தொடர்பில் இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பொன்று வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி மருத்துவ ஆலோசனையின்றி பாலுணர்வை தூண்டும் எந்த மாத்திரைகளையும் பயன்படுத்த வேண்டாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விடயத்தை கொழும்பு தேசிய வைத்தியசாலையின் மரண விசாரணை அதிகாரி இரேஷா தேஷானி சமரவீர கூறியுள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கூறுகையில், பாலுணர்வை தூண்டும் மாத்திரைகள் பாவனையால் மாதாந்தம் 2 முதல் 3 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
இது மிகவும் உயர்ந்த மரண வீதம் ஆகும். இவ்வாறு உயிரிழந்தவர்கள் 20 தொடக்கம் 25 மற்றும் 40 தொடக்கம் 45 வயதுகளை உடையவர்கள்.
இவர்கள் மருத்துவ ஆலோசனை இன்றி பாலுணர்வை ஏற்படுத்தும் மாத்திரைகளை உட்கொண்டவர்கள்.
மருத்துவ ஆலோசனையின்றி பாலுணர்வை தூண்டும் மாத்திரைகளை உபயோகிப்பதும், தரமற்ற மருந்துகளை உட்கொள்வதுமே இவ்வாறான இறப்புகளுக்கு முக்கிய காரணமாக காணப்படுகிறது.
மருத்துவர்களின் ஆலோசனை இன்றி இவ்வாறான மாத்திரைகளை உட்கொள்வது மிகவும் ஆபத்தானது.
எனவே மருத்துவ ஆலோசனையின்றி பாலுணர்வை தூண்டும் எந்த மாத்திரைகளையும் பயன்படுத்த வேண்டாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.