
வடக்கு மாகாண பண்பாட்டு பெருவிழா நேற்று மிக மிக சிறப்பாக இடம் பெற்றது. நேற்று காலை 8:30 மணியளவில் நெல்லியடி முருகன் ஆலயத்திலிருந்து பூசை வழிபாட்டுடன் தமிழர் பாரம்பரிய தப்பாட்டம், சிலம்பாட்டம், கும்மி, பறை இசை, கரகம், காவடி, மயிலாட்டம், ஆதிவாசிகள் ஆட்டம், பொம்மலாட்டம், ஒயிலாட்டம், காத்தான் கூத்து, அரிசந்திரா பாடல், கரவலை பாடல் உட்பட பல ஆட்டங்கள் பாட்டங்களுடன் அழைத்து வரப்பட்ட வேளை வீதி இருமருங்கும் நிறைகுடம் வைத்து மக்கள் வரவேற்றதுடன் நெல்லியடி மத்திய கல்லூரி விழா மண்டபம் வரை விருந்தினர்கள் அழைத்து வரப்பட்டனர். அங்கு மறைந்த எழுத்தாளர் தெணியாயன் அரங்கில் நிகழ்வுகள் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இ. வரதீஸ்வரன், தலமையில் அரங்க நிகழ்வுகள் இடம் பெற்றது.
















வரவேற்று நடனம், வரவேற்புரையினை வடமாகாண பண்பாட்டு அமைச்சின் பிரதி பணிப்பாளர் திருமதி ராஜமல்லிகை சிவசுந்தர சர்மா தலமை உரை, மற்றும் கலை நிகழ்வுகளும் இடம் பெற்றன.
அதனை தொடர்ந்து வட மாகாணத்தின் அதி உயர் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.













இதில் கருத்துரையை சொல்லருவி சிவகுமாரன், யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் பிரதீபன் நிகழ்த்தினார்.
அதனை தொடர்ந்து வடந்தை எனும் நூல் வடமாகாண பண்பாட்டு அலுவல்கள் திணைக்களத்தால் வெளியீட்டு வைக்கப்பட்டன.
இதில் பிரதம விருந்தினராக வடமாகாண பிரதம செயலாளர் சமன் பந்துல, சிறப்பு விருந்தினராக யாழ் மாவட்ட யாழ் மாவட்ட மேலதிக அரச அதிபர் பிரதீபன், கல்வி அமைச்சின் செயலாளர் இ.வரதீஸ்வரன், கௌரவ விருந்தினராக சொல்லருவி சிவகுமார், யாழ் பல்கலைக்கழக வாழ்நாள் பேராசிரியர் திருசண்முகநாஸ், திருமதி சண்முகதாஸ், மற்றும் விருந்தினர்களாக கரவெட்டி பிரதே சபை உப தவிசாளர் பொன்னையா, பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் ச.அரியகுமார், வடமராட்சி வடக்கு பிரதேச செயலக உதவி பிரதேச செயலர் தயானந்தன், வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் பற்றிக் நிறஞ்சன், வடமராட்சி வலய கல்வி பணிப்பாளர் சத்தியசீலன், யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர் அஜந்தகுமார், உட்பட்ட பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இன்றைய இந்த நிகழ்வில் செம்மொழியால் தமிழ் மொழி எனும் ஊர்தி, வடமராட்சி கிழக்கு பிரதேசத்தின் வாழ்வியல் மற்றும் தொழிலை சித்தரிக்கும் ஊர்தி, சர்வமத குருமார் உட்பட பல ஊர்திகளும் பவனி வந்தன. இதில் வடக்கு மாவட்டத்திற்க்குட்பட்ட பல கலைஞர்கள், எழுத்தாளர்கள், அரச உத்தியோகத்தர்கள், அதிகாரிகள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.