சட்ட விரோதமான முறையில் சுண்டிக்குளம் பறவைகள் சரணாலய பகுதியில் மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவு இயந்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதுடன், அதனை செலுத்திய இரண்டுசாரதிகளையும் 01:11:2022 திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது.
கிளிநொச்சி மாவட்ட நீதிமன்ற எல்லைக்குட்பட்ட. சுண்டிகுளம் தேசிய பூங்கா மற்றும் பறவைகள் சரனாலயமாக பிரகடனப் படுத்தப்படடுள்ள பகுதியான கோரமொட்டைப் பகுதியில் சட்டவிரோதமான முறையில் 27.10.2022 அன்று அனுமதியின்று உள் நுழைந்து மணல் மண் ஏற்றியவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் இரண்டு உழவு இயந்திரங்களும் வனஜீவராஜிகள் திணைக்கள அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் அவர்கள் மீது பறவைகள் மற்றும் விலங்குகள் வாழ்வதற்காகவும், இயற்கை வளங்கள் பாதுகாக்கப் படுவதற்காகவும், அரசாங்கத்தினால் பிரகடனப்படுத்தப்பட்டு அதற்கென ஒதுக்கப்பட்ட பகுதியில் சட்டவிரோதமான முறையில் மணல் அகல்வி ஈடுபட்ட குற்றச்சாட்டிலேயே இரண்டு உழவு இயந்திர சாரதிகளும் கைது செய்யப்பட்டு இரண்டஹ உழவு இயந்திரங்களும் கைப்பற்றப்பட்டு வன ஜீவராஜிகள் திணைக்கள் அதிகாரிகளால் கிளிநொச்சி நீதிமன்றில் கடந்த 28.10.2022 அன்று முன்னிலை படுத்தப்பட்ட நிலையில் சட்டவிரோதமான முறையில் மணல் அகழ்வில் ஈடுபட்ட இரண்டு உழவியந்திர சாரதிகளுக்கும் எதிர்வரும் 01.11.2022திகைதிரை விளக்க மறியலில் வைக்க உத்தரவிடப்பட்டதுடன் மணல் ஏற்றுவதற்க்கு பயன்படுத்திய இரண்டி உழவு இயந்திரங்களும் தடுத்து வைக்கப்பட்டுள்ளன என கிளிநொச்சி வன ஜீவராஜிகள் திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
வடமராட்சி