
வடமராட்சி செல்வச்சந்திதி முருகன் ஆலயத்தில் நேற்று இரவு சூரன் போர் மிக மிக சிறப்பாக இடம் பெற்றுள்ளது.
கந்தசஸ்டி நாளின் இறுதி நாளான நேற்று பல ஆயிரம் பக்தர்கள் புடை சூழ செல்வச் சந்நிதியில் சூர சங்காரம் இடம் பெற்றுள்ளது.
கொட்டும் மழையிலும் பக்தர்கள் ஆயிரக் கணக்கில் கலந்து கொண்டமை சிறப்பம்சமாகும்.