
யாழ். மாவட்ட செயலகத்திற்குள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தியாவிலிருந்து திரும்பி வந்த இலங்கையர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குவதற்கான நடமாடும் சேவை இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் விஜயதாச ராஜபக்சவிற்கு எதிர்ப்பு தெரிவித்தே வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அத்துடன் ஓ.எம்.பி வேண்டாம், சர்வதேச நீதி விசாரணையை மட்டுமே நாங்கள் கோருகிறோம், இரண்டு இலட்சம் லஞ்சம் வேண்டாம், நீதி அமைச்சரே வெளியேறு, விஜயதாச ராஜபக்சவே வெளியேறு என கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜா கஜேந்திரனும் குறித்த போராட்டத்தில் பங்கேற்றிருந்தார்