ஹிக்கடுவ, திராணகம பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரை மற்றுமொரு மோட்டார் சைக்கிளில் சென்ற இருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துப்பாக்கிச் சூடு இன்று (31) காலை 9.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நீதிமன்ற வழக்கு ஒன்றுக்காகச் சென்ற இருவர் இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.