வன்னி மண்ணின் இறுதி மன்னன் மாவீரன் பண்டாரவன்னியனின் 220 ஆவது ஆண்டு நாள் இன்றாகும்.
1803 இல் ஒக்டோபர் 31 கப்டன் “ஹென்றிபேக்” கற்சிலைமடுவில் மாவீரன் பண்டாவன்னியன் தோற்கடிக்கப்பட்டதாக சொல்லும் நடுகல்லும் தற்போதைய இலங்கைப் படையினரால் உடைக்கப்பட்ட நிலையில் இன்றும் ஒட்டிசுட்டானில் காணப்படுகிறது.
1803 ல் தோற்கடிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் பண்டாரவன்னியன் அதற்குப் பிறகும் சிலபோர்களை நடத்தி 1811ல் வீரமரணமடைந்தான் என்பது உட்பட பல்வேறு கருத்துக்கள் மக்கள் மத்தியில் இன்றும் உலாவுகின்றன.
1803 ஆம் ஆண்டு முல்லைத்தீவு கோட்டையை ஆங்கிலேய படைகளிடமிருந்து மீட்டு இரண்டு பீரங்கிகளை கைப்பற்றி ஆங்கிலேயருக்கு எதிராக தீவிரமாக போராடினார் என்பதும் தமிழ் இனத்தின் வரலாறு.