வீழ்ச்சியடைந்திருந்த நாட்டின் பொருளாதாரம் தலைதூக்கி வரும் நிலையில் அதனை மீண்டும் வீழ்ச்சியடையச் செய்து அரச அராஜக நிலையை ஏற்படுத்தவே எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து ஆர்ப்பாட்டத்திற்கு தயாராகி வருகின்றதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.
அத்துடன் நாட்டுக்கு அதிக வருமானம் கிடைக்கும் சுற்றுலா பயணிகளின் வருகை எதிர்வரும் 3ஆம் திகதியே ஆரம்பிக்கின்றது. இதன்மூலம் பாரியளவில் டொலர்களை நாட்டிற்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டு அதனை தடுக்க வேண்டாம் என ஐக்கிய தேசிய கட்சி எதிர்க்கட்சிகளிடம் கோரிக்கை விடுத்தது. மக்கள் இதற்கு துணை போகக்கூடாது எனவும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.