அரசாங்கத்தால் பின்பற்றப்பட்டு வரும் நிதிக்கொள்கையின் அடிப்படையில் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க அறிவித்துள்ளார்.
கொழும்பில் அண்மையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், செப்டெம்பர் மாதத்தில் 69.8% ஆக இருந்த பணவீக்கம், அக்டோபரில் 66% ஆகிவிட்டது.
இது மீண்டும் பொருட்களின் விலைகளில் விரைவான குறைவு ஏற்படும் என்று அர்த்தமல்ல.
எனினும் இதன் காரணமாக பொருட்களின் விலைகளில் விரைவான குறைவினை எதிர்காலத்தில் சந்திக்கலாம் என நாம் அர்த்தப்படுத்திக் கொள்ள முடியாது.
ஆனாலும் அரசாங்கத்தின் நிதிக் கொள்கையின் அடிப்படையில், படிப்படியாக விலை குறைகிறது.
நாட்டின் ஸ்திரத்தன்மையை தொடர்ந்து பேணினால், அடுத்த ஆண்டு இறுதிக்குள் பலமான பொருளாதாரத்தை உருவாக்க தேவையான அடிப்படை அடித்தளத்தை அமைக்க முடியும் என குறிப்பிட்டுள்ளார்.