முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றத்திற்குள் நீதவான் விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்ட திருட்டு குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நீதிமன்ற வளாகத்திற்குள் இருந்து தப்பியோடிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.
புதுக்குடியிருப்பில் வீடு ஒன்றில் நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் (31.10.2022) நீதிமன்ற வளாகத்தில் இருந்து தப்பியோடியுள்ளார்.
புதுக்குடியிருப்பு 06 ஆம் வட்டாரம் சிவநகர் பகுதியில் கடந்த 26.10.22 அன்று பட்டப்பகலில் வீடு உடைத்து பெறுமதியான நகைகள் மற்றும் பொருட்கள் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதன்போது 6 பவுண் தாலிக்கொடி உள்ளிட்ட 14 பவுண் நகைகள் 15 ஆயிரம் பணம் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன.
இந்த சந்தேகத்தில் சிவநகர் பகுதியினை சேர்ந்த 28 அகவையுடைய குடும்பஸ்தர் ஒருவர் கடந்த 31.10.22 அன்று கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் அவரிடம் இருந்து கொள்ளையிடப்பட்ட நகைகளை தவிர பொருட்கள் அனைத்தும் மீட்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இவரை 31.10.2022 அன்று முல்லைத்தீவு மாவட்ட நீதாவான் நீதிமன்றில் புதுக்குடியிருப்பு பொலிசாரால் முன்னிலைப்படுத்தப்பட்ட போது 08.11.22 வரை விளக்கமறியலில் வைக்க மன்று உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் குற்றவாளிக்கூண்டில் நின்ற சந்தேக நபர் கூண்டில் இருந்து இறங்கி நீதிமன்றத்தில் வாசல் கதவு ஒன்றினால் தப்பிஓடியுள்ளார்.
குறித்த சந்தேக நபரை தேடியும் பிடித்துக்கொள்ளாத நிலையில் புதுக்குடியிருப்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எம்.பி.ஆர்.கேரத் தலைமையிலான பொலிஸ்சாயன்ட் ஜெயசிங்க, பொலிஸ்கொஸ்தபிள்களான ஜெயசூரிய, பிரதீபன், அரூஸ், ஆகியோர் கொண்ட குழுவினர் குறித்த குற்றவாளியினை சிவநரில் உள்ள அவரது வீட்டில் வைத்து பொலிஸாரால் கைதுசெய்துள்ளார்.
மேலும் கொள்ளைக்குற்றத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரையும் கைதுசெய்துள்ளார்கள்.
இவர்கள் இருவரையும் நேற்று (01.11.2022) முல்லைத்தீவு மாவட்ட நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தும் நடவடிக்கையில் புதுக்குடியிருப்பு பொலிஸார் ஈடுபட்டுள்ளார்கள்.