
அழகு நிலையங்களில் முடி வெட்டும் போதும் எச்.ஐ.வி தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளதாக தோல் நோய் வைத்திய நிபுணர் வைத்தியர் ஜனக அக்கரவிட தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே வைத்தியர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, எச்.ஐ.வி தொற்று ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் காணப்படும் பட்சத்தில் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெற வேண்டும் .இதன் மூலம் ஏனையோருக்கும் தொற்று பரவுவதினை தடுக்க முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்டவர்கள் தேவையற்ற விடயத்தில் வெளியிடங்களில் சுற்றித்திரிவதினை தவிர்த்துக்கொள்வதும் சிறந்தது என குறிப்பிட்டுள்ளார்.