மட்டக்களப்பு ஆயித்தியமலை பொலிஸ் பிரிவிலுள்ள ஓலியமடு பிரதேசத்தில் குடிமனைகளுக்குள் நேற்று புதன்கிழமை (02) இரவு உட்புகந்த காட்டுயானை வீடு ஒன்றை உடைத்து சேதமாகியதுடன் அந்தபகுதியில் இருந்த தென்னை மரங்கள் மற்றும் மரவள்ளி வாழை போன்றவற்றை சேதமரிகியுள்ளதாகவும் இரவில் உயரை பயணம்வைத்து வாழவேண்டியுள்ளதாக அந்த பகுதி மக்கள் கடும் கவலை தெரிவித்துள்ளனர்.
ஒலியமடு பிரதேசத்தில் பயிர் செய்கையை வாழ்வாதாரமாக கொண்டு 200 குடும்பங்களுக்கு மேற்பட்ட மக்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் தினமும் காட்டுயானை குடிமனைக்குள் உட்புகுந்து அங்கு பயிரடப்பட்டுள்ள மரக்கறி பயிர் செய்கைகள் மற்றும் பலன் தரும் தென்னை வாழi மரங்களை முடித்து சேதமாக்கி வருகின்றது
இதேவேளை இந்த யானை தொல்லையினால் மாணவர்கள் கல்வி கற்றமுடியாமலும் இரவில் பயப்பீதியுடன் அச்சத்தில் வாழ்ந்துவருவதாகவும் தினமும் யானையில் இருந்து தம்மை பாதுகாக்க இரவில் கண்முழித்து இருக்க வேண்டியுள்ளதுடன் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்கி வருவதாகவும் இது தொடர்பாக உரிய அதிகாரிகளுக்கு பலமுறை அறித்திமதும் எதுவித நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்னர்.
எனவே எமது உயிரையும் வாழ்வாதாரத்தையும் காப்பாற்ற அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்காவிடில் நாங்கள் அங்கிருந்து வெளியேறவேண்டி நிலை ஏற்பட்டுள்ளது எனலே உரிய அதிகாரிகள் இது தொடர்பான நடவடிக்கை எடுக்குமாறு அப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.