
ஜனதா விமுக்தி பெரமுன மற்றும் முன்னிலை சோசலிசக் கட்சியின் இரண்டு மாணவர் குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
களனி பல்கலைக்கழகத்தின் கன்னங்கரா விடுதியில் இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
மோதலில் காயமடைந்த மாணவர்கள் வீட்டுக்கு அனுப்பப்பட்ட போதிலும் அவர்கள் வீடுகளுக்குச் செல்லாமல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பில் வைத்தியசாலை பொலிஸாருக்கும், களனி பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.