வரவு செலவுத் திட்ட விவாதம் மற்றும் வாக்கெடுப்பு முடியும் வரை அமைச்சரவையை மாற்றியமைப்பதில்லை என ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக மிகவும் நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.
வரவு செலவுத் திட்டத்திற்கு முன்னர் அமைச்சரவையை மாற்றி ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, நாமல் ராஜபக்ஷ, ரோஹித அபேகுணவர்தன உள்ளிட்ட பொதுஜன பெரமுன குழுவினருக்கு அமைச்சு பதவி வழங்குமாறு ஜனாதிபதிக்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டுள்ளது.
அவ்வாறு நியமிக்கவில்லை என்றால் வரவு செலவு திட்டம் தோற்கடிக்கப்படும் என குழுவினர் அச்சுறுத்தும் வகையில் கூறியமையினால் ஜனாதிபதி இந்த தீர்மானத்தை எடுத்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய, வரவு செலவுத்திட்டத்தின் பின்னர் அமைச்சரவை தொடர்பில் தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி தனது நிலைப்பாட்டை தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் 14ஆம் திகதி வரவு செலவு திட்டம் தாக்கல் செய்யப்படுகிறது. அதன் பிறகு வரவு செலவு திட்டம் மீதான விவாதம் இரண்டு வாரங்களுக்கு நடைபெறும்.