
போதைப் பொருள் பாவனை, சிறுவர் துஸ்பிரயோகம் உட்பட சமூக சீர்கேடுகளை கட்டுப்படுத்த அரச அதிபர் தலைமையில் குழு நியமிக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் அதிகரித்துள்ள போதைப் பொருள் பாவனை, சிறுவர் துஸ்பிரயோகம் உட்பட சமூக சீர்கேடுகளை கட்டுப்படுத்துவதற்கு, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா வழங்கிய ஆலோசனையின் அடிப்படையில்,
விசேட குழு ஒன்றினை, உருவாக்கி அவற்றைக் கட்டுப்படுத்தற்கான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கு கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்ற கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதற்கு அமைவாக, கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் றூபவதி கேதீஸ்வரன் தலைமையில் விசேட குழு நியமிக்கப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.


