சீன போர் கப்பல்களுக்கு எரிபொருள் விநியோகம் செய்யும் இலங்கையின் நடவடிக்கைக்கு பலம்பொருந்திய நாடுகள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளன.
இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இவ்வாறு எதிர்ப்பினை வெளியிட்டுள்ளன.
ஆழ் கடலில் சீன போர் கப்பல்களுக்கு இலங்கை எரிபொருள் விநியோகம் செய்வதனை இவ்வாறு இந்தியாவும் அமெரிக்காவும் எதிர்த்துள்ளன.
ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் எரிபொருள் பெற்றுக் கொண்டு அந்த எரிபொருளை ஆழ் கடலுக்கு எடுத்துச் சென்று சீன போர்க் கப்பலுக்கு எரிபொருள் நிரப்புவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடுமையான பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்கி வரும் இலங்கை டொலர் ஈட்டும் நோக்கில் இவ்வாறு எரிபொருள் விநியோகிப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, ரஸ்ய போர் கப்பல்கள் இரண்டு இலங்கை வருவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
உக்ரைன் போர் இடம்பெற்று வரும் நிலையில் இந்த போர் கப்பல்கள் நாட்டுக்குள் பிரவேசித்தமை குறித்து அமெரிக்கா கடும் கரிசனை கொண்டுள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.