மட்டக்களப்பு கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள பிரதேசங்களில் பல வீடுகளை உடைத்து நீண்ட கலமாக திருட்டில் ஈடுபட்டுவந்த சுள்ளான் தீருட்டுக்கும்பல் தலைவர் உட்பட 6 பேரை இன்று ஞாயிற்றுக்கிழமை (06) கைது செய்ததுடன் திருடப்பட்ட ரிவி, தண்ணீர் மோட்டர் 8 , சைக்கிள் 2, தங்க ஆபரணங்கள் என்பற்றை மீட்டுள்ளதாக கல்குடா பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த பிரதேசங்களில் உள்ள வீடுகளை உடைத்து அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் தங்க ஆபரணங்கள் திருட்டுப்போயுள்ள சம்பவங்கள் தொடர்பாக பொலிசார் தொடர் விசாரணையில் ஈடுபட்டுவந்த கல்குடா பொலிசார் சம்பவதினமான இன்று காலை வாழைச்சேனை மருதநகரில் வைத்து திருட்டுக் கும்பலின் தலைவர் சுள்ளான் உட்பட 6 பேரை கைது செய்தனர்.
இதில்; கைது செய்யப்பட்டவர்கள்; வாழைச்சேனை சந்திவெளி பிரதேசங்களில் இடம்பெற்ற வீடுகளை உடைத்து திருடிடப்பட்ட சம்பவங்களில் தொடர்புடையவர்கள் எனவும் இவர்கள் கல்குடா, கல்மடு, பிரதேசங்களைச் சேர்ந்த இளைஞர்கள் எனவும் இவர்களிடமிருந்து திருடப்பட்ட ரிவி ஒன்று, தண்ணீர் இறைக்கும் மோட்டர் 8 சைக்கிள் 2, மேசைமின்விசிறி ஒன்று , கால் பவுண் கொண்ட சங்கிலி ஒன்று கால்பவுண் கொண்ட தங்க மோதிரம் இரண்டு, மடிகளனி ஒன்று, டிஜிற்றல் தராசு ஒன்று என்பவற்றை மீட்டுள்ளதாகவும் இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.