
மக்கள் அரசியல் தீர்வுடன் கூடிய சுய கௌரவத்துடன் வாழ வேண்டும் என வலியுறுத்தி கிளிநொச்சியில் கல்மடு நகர் பகுதியில் கவனயீர்ப்பு போராட்டம்





வடக்கு கிழக்கு மக்கள் அரசியல் தீர்வுடன் கூடிய சுய கௌரவத்துடன் வாழ வேண்டும் என வலியுறுத்தி வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழு 100 நாள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகிறது.
நில அபகரிப்பு ,தொல்லியல் என்ற பெயரில் வனஇலா காணிகளை சுவீகரிப்பு போன்ற விடயங்களை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தி 100 நாள் போராட்டத்தை வலியுறுத்தி 98வது நாளான நேற்று 06.11.2022 கிளிநொச்சி கல்மடுநகர் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட றங்கன் குடியிருப்பு பகுதியல் நடைபெற்றது.