மசகு எண்ணெய் திருடப்பட்டதாகக் கூறி ஈக்குவடோரியல் கினியாவால் தடுத்து வைக்கப்பட்டிருந்த இலங்கை பணியாளர்கள் அடங்கிய கப்பலின் நடவடிக்கைகள் குறித்து நைஜீரிய அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஹெரோக் இடுன் (Hunter Idun) என்ற எண்ணெய் தாங்கி கப்பலில் எட்டு இலங்கை பணியாளர்கள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
நைஜீரியாவில் மசகு எண்ணெய் திருடப்பட்டதாகக் கூறப்பட்டு மத்திய ஆபிரிக்க நாடான ஈக்குவடோரியல் கினி நாட்;டு படைகளால் தடுத்து வைக்கப்பட்டுள்ள, எண்ணெய் தாங்கி கப்பலின் நடவடிக்கைகள் குறித்து விசாரணை நடத்தி வருவதாக நைஜீரிய கடற்படை கூறியுள்ளது.
நைஜீரியாவின் எண்ணெய் வயலில் இருந்து குறித்த தப்பிய நிலையில், கப்பலும் அதன் பணியாளர்களும் ஈக்குவடோரியல் கினி நாட்;டு படைகளால் ஆகஸ்ட் 7 அன்று தடுத்து நிறுத்தப்பட்டனர்.
இதனையடுத்து அவர்கள் நைஜீரியாவுக்கு அனுப்பப்படவுள்ளனர். நைஜீரிய அதிகாரிகள், இந்த கப்பல் குறித்து விசாரணையை நடத்துகின்றனர். குற்றம் நிரூபிக்கப்பட்டால்,தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று நைஜீரிய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
நைஜீரிய தேசிய பெட்ரோலிய நிறுவனம், கடந்த செப்டம்பர் மாதம் வெளியிட்ட தகவலில், எண்ணெய் திருட்டு மற்றும் ஏனைய நடவடிக்கைகள் காரணமாக ஒவ்வொரு மாதமும் 700 மில்லியன் டொலர்களை இழப்பதாகக் கூறியிருந்தது.
இதேவேளை கடந்த செப்டம்பரில் மாத்திரம் 210 எண்ணெய் திருடர்களை கைது செய்ததாக ஈக்குவடோரியல் கினி அரசாங்கம் தெரிவித்துள்ளது.