2022ஆம் ஆண்டை விடவும் 2023ஆம் ஆண்டுக்கான அரச செலவீனம் 1,65,700 கோடி ரூபாவால் அதிகரிக்கும் என அரச நிதி தொடர்பான குழுவின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஒதுக்கீட்டு சட்டமூலம் அரசாங்க நிதி தொடர்பான குழுவினால் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது அரசாங்கத்தின் கொள்கையாக இருந்தாலும் பெருமளவில் எங்களின் செலவு அதிகரிக்கின்றது.
கடந்த வருடத்தில் 6,22800 கோடி ரூபாவாக எங்களின் மொத்த செலவீனம் இருந்தது. அது 788500 கோடி அதிகரித்துள்ளது. இது 165700 கோடி ரூபா உயர்வாகும்.
இந்த நிலையில் 2022ஆம் ஆண்டில் நாங்கள் அதிகரித்த தொகையை வருமானமாக பெற்றுக்கொள்வோமா என்றும் கூறமுடியாது. அரச வருமானத்தைக் கொண்டு இந்த செலவுகளை ஈடு செய்ய முடியுமா என்று எதிர்வு கூற முடியாது.
ஆனால் வரவு செலவுத் திட்டத்தில் இந்த துண்டுவிழும் தொகையை எப்படி நிரப்பப் போகின்றோம் என்று கூறுவார்கள் என்று எதிர்ப்பார்க்கின்றோம்.
வரிகள் அதிகரிக்கப்பட வேண்டும் என்றாலும் செலவுகளை குறைப்பதற்கே அரசாங்கம் அவதானம் செலுத்த வேண்டும் என்றார்.