
கண்டாவாளப் பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட நெத்தலியாறு மற்றும் புளியம்பொக்கனை பகுதிகளில் பெரும்போக விவசாய நடவடிக்கைகளில் மேற்கொள்ளப்பட்ட பகுதிகளினூடாக சென்று நெத்தலியாறு பகுதியில் சட்டவிரோதமான முறையில் குழிகள் தோண்டப்பட்டு மணல் அகழ்வு இடம் பெற்று வருவதாகவும் விவசாயிகள் தெரிவிப்பதுடன் இதனால் தமது பயிர்கள் பாதிக்கப்படுவதாகவும், வயல் நிலங்கள் பாதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கின்றனர்.




அத்துடன் பயிர்செய்கை முடிவடைந்த காலப்பகுதிகலகிலும் வயல் நிலங்களில் மண் அகழந்து அம் மண் வெளிமாவட்டங்களுக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், இதன் காரணமாக தாம் ஒவ்வொரு வருடமும் வயல்களை மீளா புனரமைத்து பயிர்செய்கையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இது தொடர்பாக கனியவளம் மற்றும் புவி சரிதவியல் திணைக்கள அதிகாரிகள் குறித்த பகுதியை பார்வையிட்டு இடம் பெறும் பாரிய அழிவிலிருந்து பாதுகாக்க முன்வருமாறும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.