ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட, கரம்பன் பகுதியில் வசித்து வந்த வாய் பேச முடியாத பெண் ஒருவரும் அவரது 4 வயது மகளும் கடந்த 08.11.2022 அன்று காணாமல் போன நிலையில், அவர்களை பொதுச்சுகாதார குடும்ப நல உத்தியோகத்தர்கள் இன்றையதினம் மீட்டுள்ளனர்.
பெண்ணின் கணவரால், அவருடைய (பெண்) கண்ணீர் அஞ்சலி போஸ்டர் மற்றும் குழந்தையை தாக்கும் காணொளி என்பன சமூக ஊடகங்களில் வெளியாகியிருந்தன.
இது தொடர்பில் கவனம் எடுத்த ஊர்காவற்துறை பொது சுகாதார வைத்திய மருத்துவர் பரா.நந்தகுமாரின் தலைமையிலான குழுவினர்கள் இன்று காலை குழந்தை மற்றும் தாயினை மீட்டுள்ளனர்.
மோசமாக தாக்கப்பட்ட குழந்தையும் தாயும், நேற்று காலை 7.45 மணியளவில், திருகோணமலையிலிருந்து தப்பி வந்து யாழ். பண்ணை பாலத்தடியில் செய்வதறியாது நின்ற போது அவர்கள் குடும்ப நல உத்தியோகத்தர் டினுசாவால் மீட்கப்பட்டுள்ளார்கள்.
அவர்கள் வட மாகாண சிறுவர் பராமரிப்பு திணைக்களத்திடம் தற்போது ஒப்படைக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனைகளுக்காக அவர்கள் அங்கிருந்து யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மனைவி இறந்ததன் பின்னர் தனது குழந்தையை கொடூரமான முறையில் சித்திரவதை செய்யும் தந்தை தொடர்பான தகவல் வெளியாகியிருந்தது.
யாழ்ப்பாணம்-ஊர்காவற்துறை காவல்துறை பிரிவிற்கு உட்பட்ட கரம்பன் பகுதியில் குறித்த தந்தை குழந்தை ஒன்றின் மீது கொடூரமான தாக்குதல் நடத்தும் காணொளி கடந்த நாட்களில் சமூக வலைத்தளங்களில் வெளியாகியிருந்தது.
இவ்வாறு தாக்குதலுக்குள்ளான குழந்தை இன்று காலை யாழ்.பண்ணை பகுதியில் கைவிடப்பட்டுள்ளது.இந்த சம்பவம் அங்கு சென்ற பலர் மத்தியில் பெரும் மன களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதனைதொடர்ந்து சிறுவர் நன்னடத்தைப் பிரிவு உத்தியோகத்தர்களால் குறித்த குழந்தை மீட்கப்பட்டு யாழ்.மாவட்ட சிறுவர் நன்னடத்தைப் பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
ஊர்காவற்றுறை – கரம்பொன் மேற்கைச் சேர்ந்த நிரோஜினி என்ற வாய்பேச முடியாத இளம் பெண் ஒருவர் சுருவிலைச் சேர்ந்த நந்தகுமார் சிவச்சந்திரன் என்பவரை திருமணம் செய்து கொண்டுள்ளார். இவர்களுக்கு நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கணவனை பிரிந்து சென்று வாழ்ந்து வந்த நிரோஜினி கடந்த இரு மாதத்திற்கு முன்னரே கணவனுடன் மீண்டும் இணைந்து வாழ்ந்து வந்துள்ளார்.
எனினும், சில நாட்களுக்கு முன்னர் அந்த பெண் உயிரிழந்த நிலையில், தற்போது நான்கு வயதான குழந்தையை தந்தை கடுமையாக தாக்கி சித்திரவதை செய்து வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவ்வாறு குழந்தை சித்திரவதை செய்யப்படும் படங்களும் காணொளிகளும் சமூக வலைத்தளங்களில் வெளியாகின.
இந்த காணொளி சமூக ஊடகங்களில் பரவ ஆரம்பித்த நிலையில் அது ஊர்காவற்துறை பொது சுகாதார வைத்திய அதிகாரியின் கண்களில் எட்டியுள்ளது.
இதனையடுத்து விரைந்து செயற்பட்ட பொது சுகாதார வைத்திய அதிகாரி, குறித்த காணொளியை ஊர்காவற்துறை நீதிவானுக்கும் ஊர்காவற்துறை காவல்துறையினருக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
இதனையடுத்து குறித்த சந்தேகநபரை கைது செய்யுமாறு ஊர்காவற்துறை காவல்துறையினருக்கு, ஊர்காவற்துறை நீதிவான் உத்தரவிட்ட நிலையில் இன்று காலை சமூக ஊடகங்களில் காணொளியில் வெளியாகிய குறித்த குழந்தை மீட்கப்பட்டு சிறுவர் நன்னடத்தை பிரிவில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.