
கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 40க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்ற விளாவேடை கிராமம் கடும் மழை காரணத்தினால் அக்கிராம மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பற்ற பாலத்தினால் வெள்ளம் பெருக்கெடுத்து செல்வதனால் பாடசாலை மாணவர்கள், கிராம மக்கள், ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட விவசாய நிலங்களுக்கு செல்லும் பாதையே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளது.
விவசாயிகள் இவ் பாதுகாப்பற்ற பாலத்தினால் போக்குவரத்து மேற்கொள்ள வேண்டிய துப்பாக்கி நிலை காணப்படுவதனால் மக்கள் மிகவும் அச்சத்துடன் இப்ப பாதையை பாவித்து வருகின்றார்கள்.

