
தென்னிலங்கையில் பாடசாலை மாணவனின் கொடூரமான தாக்குதலில் பாதிக்கப்பட்ட அரசாங்க அதிகாரி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
களுத்துறை, பயாகல பகுதியில் வீடொன்றுக்கு மீற்றர் அளவீட்டை பரிசோதிக்க சென்ற நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் ஊழியர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
17 வயதான மாணவனின் தாக்குதலில், ஊழியர் தரையில் விழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தண்ணீர்க் கட்டணத்தில் 601க்கு பதிலாக 607 எனப் பதிவு செய்தமை தொடர்பில் ஏற்பட்ட வாக்குவாதம் கைகலப்பாகியதன் பின்னரே இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
தாக்குதலுகு்க இலக்கான ஊழியர் சிகிச்சைக்காக களுத்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தாக்குதலை மேற்கொண்ட மாணவனை பொலிஸார் கைது செய்துள்ளனர்.