
யாழ்.மாதகல் – சம்பில்த்துறை சம்புநாதஸ்வரர் கோவிலில் இருந்த சுமார் 20 லட்சம் ரூபாய் பெறுமதியான சிவலிங்கம் திருடிச் செல்லப்பட்டுள்ளது.
இந்தியாவின் காசி புனித பிரதேசத்தில் இருந்து கடந்த 1998ஆம் ஆண்டு ஆலயத்திற்கு எடுத்து வரப்பட்டு பிரதிஷ்டை செய்யப்பட்ட ஆலயத்தின் மூல மூர்த்தியே திருடி செல்லப்பட்டுள்ளது.
ஆலயத்தில் பொருத்தப்பட்டு இருந்த சி.சி.ரி.வி கண்காணிப்பு கமராவை பரிசோதித்தபோது பூசகர் போன்ற தோற்றத்தில் ஆலயத்தினுள் உட்புகுந்த நபர் ஒருவரே சிவலிங்கத்தை திருடி சென்றுள்ளமை தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் இளவாலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதை அடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.