இந்தியாவிலிருந்து கனடாவுக்கு சட்டவிரோதமாக செல்வதற்கு முயற்சித்த நிலையில் கைது செய்யப்பட்ட 38 இலங்கையர்களும் தங்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கும்படி கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
இந்திய பொலிஸாரால் கைது செய்யப்பட்டு கர்நாடகா மாநிலத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தாங்கள் இந்திய தேசிய புலனாய்வு குழுவின் விசாரணையில் தாங்கள் ஆட்கடத்தல் காரர்களால் ஏமாற்றப்பட்டுள்ளவர்கள்.
என்பது உறுதி செய்யப்பட்டுள்ளபோதும், தொடர்ந்தும் முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் இவர்கள் கைது செய்யப்பட்டதுடன், ஆட்கடத்தல் முகவர்களால் தங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். முல்லைத்தீவு பகுதியைச் சேர்ந்த 26 பேரும், யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஐந்து பேரும்,
கிளிநொச்சி மாவட்டத்தைச் சேர்ந்த இரண்டு பேரும், வவுனியா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரும், அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த நான்கு பேரும் இவ்வாறு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.