
கல்வி பொதுத் தராதரப் பத்திர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் இந்த வருடத்தின் இறுதிக்குள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் எல் எம் டி தர்மசேன தெரிவித்தார்.
பரீட்சைகள் திணைக்களத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கருத்துரைக்கையிலேயே பரீட்சைகள் ஆணையாளர் எல் எம் டி தர்மசேன இதனை தெரிவித்தார்.
அத்துடன், பரீட்சைகள் திணைக்களத்தின் கொடுப்பனவுகள் தொடர்பிலான முழுமையான மீளாய்வுக்கு குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை, கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் நடத்தப்படாமலிருந்த தகவல் தொழிநுட்பத்திற்கான பரீட்சையை மீண்டும் நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் எல் எம் டி தர்மசேன தெரிவித்தார்.