போராட்டத்தின் போது பெண்ணொருவரின் கழுத்தை பிடித்து அச்சுறுத்திய சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தரின் சேவையை உடனடியாக இடைநிறுத்துமாறு பொலிஸ் மா அதிபரிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக ராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க இன்று தெரிவித்துள்ளார்.
மக்களை காக்க வேண்டிய சிரேஷ்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒரு பெண் பொலிஸ் உத்தியோகத்தரை மிகவும் விரும்பத்தகாத மற்றும் அவமானகரமான முறையில் கழுத்தைப் பிடித்து அச்சுறுத்தியுள்ளார்.
இந்த செயலுக்கு தாம் மிகவும் வருந்துவதாகவும், கண்டிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தற்போது பொலிஸ் சேவையில் சுமார் 9,000 பெண்கள் கடமையாற்றி வருவதாகவும், தாய்மார்கள் இவ்வாறானவற்றை எதிர்பார்த்து தமது பெண் பிள்ளைகளை பொலிஸ் சேவைக்கு அனுப்புவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.