பால்மா ஏற்றிவந்த கப்பல் கொள்கலன்களை விடுவிக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிர்வாக திணைக்களத்தின் அனுமதி மறுக்கப்பட்டதன் காரணமாக மீண்டும் பால்மாவின் விலைகளை அதிகரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பில் நேற்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து இது தொடர்பாக பால்மா இறக்குமதியாளர்கள் சங்கத்தின் தலைவர் கலாநிதி லக்ஷ்மன் விஜேசூரிய தெரிவித்துள்ளார்.
அத்துடன் 4 இலட்சம் கிலோகிராம் பால்மா அடங்கிய 17 கொள்கலன்கள் கடந்த 25 நாட்களாக கொழும்பு துறைமுகத்தில் தேங்கிக் கிடக்கின்றன.
ஆவணங்கள் மற்றும் கடன் பத்திரங்கள் தாமதமானதால் 15 கொள்கலன்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.