
குருணாகலில் இடம்பெற்ற கோர விபத்தில் மூன்று பேர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து கல்கமுவ – இஹலகம பகுதியில் இன்று இடம்பெற்றுள்ளது. அவர்கள் பயணித்த வாகனம், வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மதிலில் மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தில் இராணுவ மேஜரொருவர் உட்பட மூவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வாகனத்தில் ஐந்து பேர் பயணித்துள்ளனர். விபத்தில் காயமடைந்த இருவரும் கல்கமுவ மற்றும் பொலன்னறுவை வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.