பருத்தித்துறை பொலீஸ் பிரிவிற்க்கு உட்பட் சிவில் பாதுகாப்பு குழுவிற்க்கும், பருத்தித்துறை பொலீஸ் நிலையத்திற்க்கும் இடையிலான சந்திப்பு இன்று காலை 9:00 மணியளவில் பருத்தித்துறை பொலீஸ் நிலைய கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
பருத்தித்துறை பொலீஸ் நிலைய பொறுப்பதிகாரி தலமை பொலீஸ் பரிசோதகர் பிரியந்ய அமரசிங்க தலமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் காங்கேசன்துறை பிரதி பொலீஸ்மா அதிபர் விஜித குணரட்ண பிரதம விருந்தினராக கலந்து கொண்டு சிவில் பாதுகாப்பு குழுவுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இதில் பருத்தித்துறை உதவி பொலீஸ் அத்தியட்சகர் பிரதி பொலீஸ் அத்தியட்சகர் சுஜீவ இத்துமால் கொட,
காங்கேசன்துறை பிரதி பொலீஸ்மா அதிபர் செயலக பொலீஸ் அதிகாரி தலமை பொலீஸ் பரிசோதகர், H.K.G.A பிரியந்த, பருத்தித்துறை பொலீஸ் நிலைய உதவி பொலீஸ் பரிசோதகர் சேந்தன், வடமராட்சி வடக்கு, வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகத்திற்க்கு உட்பட்ட சிவில் பாதுகாப்பு குழு உறுப்பினர்கள், கிராம சேவகர்கள், மத குருமார்கள், பருத்தித்துறை பொலீஸ் நிலைய பொலீஸ் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
இதில் பருத்தித்துறை பிலீஸ் நிலைய பரிவில் இடம் பெறுகின்ற குற்றங்களை தடுத்தல், உட்பட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் அவற்றை தடுப்பது தொடர்பிலும் பல தீரதமானங்கள் எடுக்கப்பட்டது.