யாழ்ப்பாணம், இளவாலை பகுதியில் உள்ள வீடுகளை உடைத்து திருட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடமிருந்து 14 இலட்சம் பெறுமதியான நகை மற்றும் பணம் என்பன மீட்கப்பட்டுள்ளதாக இளவாலை காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
இளவாலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளில் மூன்று வீடுகளை உடைத்து இடம்பெற்ற திருட்டுச் சம்பவங்களின் அடிப்படையிலேயே குறித்த நபர் நேற்று(18) கைதுசெய்யப்பட்டார்.
மல்லாகம் நீதவான் நீதிமன்றில் இன்று (19) சந்தேகநபர் இளவாலை காவல்துறையினரால் முற்படுத்தப்பட்ட நிலையில், விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.