A – 9 வீதியில் போதை ஆசாமிகள் காடைத்தனம்!

பிரபல தனியார் வங்கியின் உயர்நிலை அதிகாரி ஒருவரை கொலை வெறியுடன் தாக்கி அவருடைய காரை அடித்து நொருக்கிய போதை ஆசாமிகளை பிணையில் விடுவிப்பதற்கு பொலிஸார் ஆட்சேபனை தொிவிக்காமல் மௌனம் காத்துள்ளனர். 

இந்த சம்பவம் தொடர்பாக மேலும் தொியவருவதாவது, புளியங்குளம் ஏ9 வீதியில் நேற்றுமுன்தினம் காலை கார் ஒன்றும் மோட்டார் சைக்கிளும் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியிருக்கின்றது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளிலில் பயணித்தவர் காலில் படுகாயமடைந்தார். காரை செலுத்தி வந்த பிரபல தனியார் வங்கியின் மேலதிகாரி, படுகாயமடைந்தவரை அம்புலன்ஸ் வண்டிக்கு அறிவித்து மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தார்.

விபத்து இடம்பெற்றதனால் சம்பவ இடத்துக்கு பொலிஸார் வருகை தந்து விசாரணைகளை முன்னெடுப்பதற்கு ஒத்துழைக்கும் வகையில் தனது காரை முன்நகர்த்தாமல் காத்திருத்தார்.

புளியங்குளம் பொலிஸாருக்கு தகவல் வழங்கியும் அவர்கள் சம்பவ இடத்துக்கு வருகைதர தாமதமாகிய நிலையில் அந்த இடத்துக்கு மோட்டார் சைக்கிளில் வருகை தந்த போதை ஆசாமிகள் இருவர்  வங்கி மேலதிகாரி தலைக்கவசத்தினால் கடுமையாகத் தாக்கியதுடன் காரையும் பெரும் சேதததுக்கு உள்ளாகிச் சென்றனர். பொலிஸார் சம்பவ இடத்துக்கு வருகை தருவதில் மேலும் தாமதம் ஏற்பட்டமையினால் மீளவும் அந்த இடத்துக்கு வருகைதந்த அந்த இருவரும் வங்கி மேலதிகாரியின் மீதும் அவருடன் பயணித்தவர்கள் மீதும் தாக்குதல் நடத்தினர். அவ்வேளை வீதியினால் பயணித்த சிறப்பு அதிரடிப்படையினர் தாக்குதல்தாரிகளை தடுத்ததுடன் ஒருவரை தடுத்துவைத்தனர்.

மற்றையவர் அங்கிருந்து தப்பித்தார். வங்கி மேலதிகாரி தாக்குதலுக்குள்ளாகி வவுனியா மாவட்ட மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

அங்கு எடுக்கப்பட்ட எக்ஸ்ரே கதிர்வீச்சு சோதனையில் அவரது கை என்பு முறிந்து துகள்கள் தசைகளுக்குள் சிக்குண்டதால் சத்திரச்சிகிச்சை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டது.

அதனால் வவுனியா மருத்துவமனையிலிருந்து கொழும்பு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அவருக்கு அறுவைச் சிகிச்சையளிக்க என்பு முறிவு சத்திரச்சிகிச்சை வல்லுநர் தவணையிட்டுள்ளதால் தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் தாக்குதல் நடத்தியவர்களில் ஒருவர் வவுனியா நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் முன்னிலையில் நேற்று முற்படுத்தப்பட்டார்.

கைகளால் தாக்குதல் நடத்தியதாக இலங்கை தண்டனைச் சட்டக்கோவை 314ஆம் பிரிவின் கீழ் பி அறிக்கையை தாக்கல் செய்த பொலிஸார் பிணை வழங்க ஆட்சேபனை தெரிவிக்காத நிலையில் அவருக்கு பிணை வழங்கபட்டது.

தாக்குதலுக்குள்ளான வங்கி மேலதிகாரி ஆபத்தான முறையில் தாக்கப்பட்டு தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையிலும் அவரது உடமை கடுமையான சேதத்துக்குள்ளாக்கப்பட்ட நிலையிலும்  புளியங்குளம் பொலிஸாரின் இந்த நடவடிக்கை கேள்வியை எழுப்பியுள்ளது.

இதேவேளை, இந்தச் சம்பவ இடத்தில் சில மாதங்களுக்கு முன்பு இடம்பெற்ற விபத்தில் பேருந்து சாரதி உயிரிழந்தாரா என்று தெரியாத நிலையில் தீயிட்டு எரியூட்டப்பட்டார்.

அது கொலையாக பதியவேண்டிய வழக்கு சிறிலங்கா பொலிஸாரினார் அந்தப் பகுதியைச் சேர்ந்த போதைப்பொருள் குழு காப்பற்றபட்டது.

Recommended For You

About the Author: Editor Elukainews