சீன கப்பலின் வருகை தொடர்பில் உருவான இராஜதந்திர நெருக்கடியை தொடர்ந்து அரசாங்கம் புதிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளது.
இதற்கமைய இலங்கைக்குள் நுழைகின்ற கப்பல்கள் மற்றும் விமானங்களிற்கு அனுமதி வழங்குகின்றமை குறித்து தீர்மானிப்பதற்காக அரசாங்கம் அதன் தேசிய பாதுகாப்பு கட்டமைப்பிற்குள் புதிய பொறிமுறையை உருவாக்கவுள்ளது.
இது தொடர்பான நடவடிக்கைகளில் பாதுகாப்பு அமைச்சும் சட்டமா அதிபர் திணைக்களமும் ஈடுபட்டுள்ளன.
ஜனாதிபதியின் சிரேஸ்ட ஆலோசகர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகரகாரியவசத்தின் மேற்பார்வையின் கீழ் கப்பல்கள் மற்றும் விமானங்களிற்கு அனுமதி வழங்குவது தொடர்பிலான புதிய நடைமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளன.
இந்த புதிய நடைமுறைகளை அரசாங்கம் விரைவில் நடைமுறைப்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.