
அரசாங்கத்தின் 2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஒன்பது மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்களை நியமிப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முடிவெடுத்துள்ளதாக தெரியவருகிறது.
புதிய மாகாண ஆளுநர்களில் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பாலித ரங்கே பண்டார நியமிக்கப்படவுள்ளதாக அறியமுடிகின்றது.
அவர் வட மத்திய மாகாண ஆளுநராக நியமிக்கப்படவுள்ளார் என்றும் தெரியவருகின்றது.
இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் ரவி கருணாநாயக்க நியமிக்கப்படவுள்ளார் என அறியமுடிகின்றமை குறிப்பிடத்தக்கது.