
மாவீரரின் பெற்றோர், உறவினர்களை மதிப்பளிக்கும் நிகழ்வு 20.11.2022 நேற்றைய தினம் கிளிநொச்சி வட்டக்கச்சியில் இடம்பெற்றது.






வட்டக்கச்சி சந்தையடிப் பகுதியில் அமைக்கப்பட்ட மண்டபத்தில் குறித்த நிகழ்வு வட்டக்கச்சி ஏற்பாட்டு குழுவினரால் முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது, ஈழ விடுதலைப் போரில் தம்மை அர்ப்பணித்த மாவீர்களின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.