
இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளது. மேலும் நிலநடுக்கத்தில் கிட்டத்தட்ட 13,000 பேர் காணாமல்போயுள்ளதாக வெளிநாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.6 ஆக பதிவானதாகவும், சேதம் குறித்த இறுதி மதிப்பீடு இதுவரை செய்யப்படவில்லை எனவும் சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இந்தோனேஷியாவில் இன்றைய தினம் பதிவான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்தும் அதிகரித்து வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இதற்கமைய, இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக தற்போது 162 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு ஜாவா மாகாணத்தில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.6 ரிக்டர் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்திற்குப் பிறகு 25 முறை நில அதிர்வு ஏற்பட்டதாக கூறப்படுகின்றது.
தொடரும் மீட்பு பணி
இந்த நிலநடுக்கத்தால் சியாஞ்சூர் நகரம் அதிக பாதிப்புக்கு உள்ளானதாகவும் பலியானவர்கள் எண்ணிக்கை 162 ஆக உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் நூற்றுக்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், ஏராளமான வீடுகள் மற்றும் கட்டிடங்கள் இடிந்து விழுந்துள்ளன.
இதேவேளை, இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் மீட்புக் குழுக்களுடன் பொதுமக்களும் இணைந்து மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.