
பருத்தித்துறை அலையன்ஸ் நிதி நிறுவனத்தால் அதன் 65 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு நிலையான நிதி மூலம் உலகை சிறந்த இடமாக மாற்றுதல் திட்டத்தின் கீழ் மரங்களை வளர்ப்போம், உலகைக் காப்போம் எனும் வகையில் இன்று காலை 9:00 மணியளவில் அலயன்ஸ் நிதி நிறுவன பருத்தித்துறைய கிளை முகாமையாளர் கு . சந்ரு தலமையில் வடமராட்சி வல்லிபுரம் ஆலய பின் பகுதியில் உள்ள மணல் பகுதியில் 10000 ம் பனம் விதைகள் நாட்டப்பட்டுள்ளன.
குறித்த மரம் நடுகை திட்டத்தின் மூலம் நிலம், நீர் மற்றும் வான் வளங்களின் நிலைத்தன்மையை பேணுவதற்கும், எதிர்கால சந்ததியினருக்கான பாதுகாப்பான சூழல் உருவாக்குவதுமே பிரதான நோக்கம் என்றும் அலைன்ஸ் பினான்ஸ் தெரிவித்துள்ளது.
இந் நிகழ்வில் ஆரம்ப நிகழ்வாக மங்கல விளக்கினை பருத்திதுறை பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திரு.சுபச்செல்வன் Alliance நிதி நிறுவன பிராந்திய முகாமையாளர் -S நிசாந்தன், நீர் வழங்கல் வடிகாலமைப்புச்சபை பொறியியலாளர் திருமதி கார்த்திகா சுதர்சன், அலைன்ஸ் நிதி நிறுவன முகாமைத்துவ உதவியாளர் செல்லத்துரை விஷ்ணு, பனை வள அபிவிருத்திச்சபை அதிகாரி நிருசன், அலய்ன்ஸ் நிதி நிறுவன தங்கக்கடன் பிரிவு பிராந்திய முகாமையாளர் குமாரதாஸ், அலயன்ஸ் நிதி நிறுவன யாழ் கிளை தலைவர் அமல்ரன் யோய், ஆகியோர் ஏற்றிவைத்து கருத்துரை வழங்கியதுடன் பனம் விதை நடுகையையும் ஆரம்பித்து வைத்தனர்.