இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் மேஜர் ஜெனரல் உமர் பாரூக் புர்கிக்கும், யாழ். மாநகர சபை முதல்வர் வி.மணிவண்ணனுக்குமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த சந்திப்பு யாழ்.மாநகர சபையில் நேற்று (22.11.2022) இடம்பெற்றுள்ளது.
உயர்ஸ்தானிகரின் விஜயத்தையடுத்து யாழ்.மாநகர சபை அலுவலகத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் குறித்த சந்திப்பில் யாழின் நிலமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டதுடன் யாழில் உள்ள பாடசாலை மாணவர்களை பாகிஸ்தானுக்கு அழைத்து அங்கு கல்வி வாய்ப்பு வழங்க முடியும் என பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் தெரிவித்ததாக யாழ்.மாநகர முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.
இந்நிலையில் இலங்கையில் வருடம்தோறும் 1200 மாணவர்களை உயர்கல்விக்காக பாகிஸ்தான் அரசாங்கம் உள்ளீர்க்கின்றது என தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் யாழ்.மாநகர ஆணையாளர் இ.த.ஜெயசீலன் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.