
வவுனியா – கனகராயன்குளம் பகுதியில் பேருந்து மற்றும் டிப்பர் வாகனம் மோதி விபத்திற்கு உள்ளாகியுள்ளன.
இந்த விபத்து சம்பவம் இன்று (24.11.2022) காலை இடம்பெற்றுள்ளது.
இதன்போது டிப்பர் சாரதி மற்றும் பேருந்தில் பயணித்த பயணிகள் உட்பட பத்திற்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளதாக தெரியவருகிறது.
விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை கனகராஜன்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.