பொலன்னறுவையில் இருந்து வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஜெயந்தியாலை பிரதேசத்திற்கு வியாபாரத்துக்காக 2 கிலோ40 கிராம் கேரளா கஞ்சாவை கடத்திவந்த ஒருவரை ஜெயந்தியாலை பகுதியில் வைத்து இன்று வியாழக்கிழமை (24) பகல் 11 மணியளில் கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை கடதாசி ஆலை இராணுவ புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து சம்பவதினமான இன்று பகல் 11 மணிக்கு வாழைச்சேனை பொலிசாருடன் இராணுவ புலனாய்வு பிரிவினரும் இணைந்து ஜெயந்தியாலை பிரதேசத்தில் கண்காணிப்பில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர்.
இதன் போது பொலன்னறுவையில் இருந்து போது போக்குவரத்து பஸ்வண்டி ஒன்றில் பை ஒன்றில் கேரளா கஞ்சாவை மறைத்து எடுத்துக் கொண்டு ஜெயந்தியாலை பிரதேசத்தில் வந்து இறங்கி காத்திருந்தபோது அவரை இராணுவ புலனாய்வு பிரிவினரும் பொலிசாரும் சுற்றிவளைத்து மடக்கி பிடித்து 2 கிலோ 400 கிராம் கொண்ட கேரளா கஞ்சவை மீட்டதுடன் அவரை கைது செய்தனர்.
இதில் கைது செய்யப்பட்டவர் 42 வயதுடைய பொன்னறுவையைச் சேர்ந்தவர் எனவும் இவர் போதை பொருள் வியாபாரி எனவும் இவரை விசாணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்.