
கொழும்பின் மாடிக்குடியிருப்பு ஒன்றில் இருந்து தூக்கி வீசப்பட்ட ஒன்றரை வயது குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
கிரேண்ட்பாஸ் பகுதியில் உள்ள சமகிபுர என்ற இடத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குடும்ப தகராறு காரணமாக உறவினர் ஒருவர் குறித்த குழந்தையை தூக்கி வீசியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.