
கிளிநொச்சி பாடசாலை ஒன்றில் வகுப்பறையை மூடி மாணவன் மீது ஆசிரியை தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட நிலையில் மாணவன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.


பெற்றுள்ளது. கிளிநொச்சி கண்டாவளை பாடசாலையில் தரம் 8ல் கல்வி கற்கும் செல்வச்சந்திரன் கலைச்செல்வன் என்ற மாணவனே இவ்வாறு சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
https://youtu.be/zVkTTiZi5j4
8ம் தரத்தில் கல்வி கற்கும் குறித்த மாணவன் ஆரம்ப பிரிவு ஆசிரியை அழைத்து வகுப்பறை ஒன்றில் அடைத்து அகப்பையினால் சரமாரியாக தாக்கியுள்ளார்.
இதனால் குறித்த மாணவன் மயக்கமுற்றுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் குடும்பத்தாருக்கு தகவல் வழங்கப்படாததுடன், மாணவன் சிகிச்சைக்குட்படுத்தப்படவுமில்லை. இந்த நிலையில் வீட்டுக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவன் 5ம் விடுதியில் சிகிச்சை பெற்று வருகின்றார். குறித்த சம்பவம் தொடர்பில் பாடசாலை சமூகம் அக்கறை கொள்ளவில்லை என பாதிக்கப்பட்ட சிறுவனின் உறவினர்கள் ஆதங்கம் வெளியிடுகின்றனர்.