
வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்க்கு உட்பட்ட மாவீரர்களின் பெற்றோர் உறவினர்கள் கௌரவிப்பு நிகழ்வு இன்றைய தினம் வடமராட்சி கிழக்கு வத்திராயன் விளையாட்டு மைதானம் ஒன்றில் இடம் பெற்றது.




வடமராட்சி கிழக்கு மாவீரர் ஏற்பாட்டுக் குழுவின் ஒழுங்கமைப்பில் இடம்பெற்ற இந்நிகழ்வில் வடமராட்சி கிழக்கு பிரதேசத்திற்க்கு உட்பட்ட மாவீரர்களின் பெற்றோர்கள், உறவினர்கள், என பலரும் மாவீரர் செயற்பாட்டு குழுவினரால் கௌரவிக்கப்பட்டனர்.




இதில் மாவீரர்களின் பெற்றோர்கள் உறவினர்கள், நலன்விரும்பிகள் என சுமார் 500 பேர் வரை கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது