மட்டக்களப்பு வாகரை கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் தமிழ் தேசிய முக்கள் முன்னணி என்ற பெயரில் மாவீரர் தினத்தை குழப்புவதற்கு அரசால் போலி துண்டுபிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது எனவே திட்டமிட்டபடி வடகிழக்கில்உள்ள ஆனைத்து துயிலும் இல்லங்களில் மாவீர்களுக்கு இன்று 6.05 விளக்கு ஏற்;றி வணக்கம் செலுத்தப்படும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுடன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் தெரிவித்தார்.
மட்டக்களப்பில் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) விசேட ஊடகசந்திப்பு இடம்பெற்ற போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இன்றைய நாள் தமிழர்களுடைய சரித்திரத்தில் புனிதமான நாள் தமிழ் மக்களின் விடுதலைக்கா தமிழ் மக்களின் இன அழிப்புக்களை பாதுகாப்பதற்காக தன்னுயிர்களை தியாகம் செய்த எமது உறவுகளான மாவீர்களை நினைவு கூருகின்ற புனிதமான நாள்.
வடகிழக்கில் தமிழ் தாயகத்தில் இருக்க கூடிய அனைத்து தயிலும் இல்லங்களிலும் எழுச்சி கோலம் பூண்டுள்ளதுடன் மாலை 6.05 மணிக்கு துயிலும் இல்லங்களில் பெற்றோhகள் உறவுக்கள் உரித்துடையேர்கள் விளக்கேற்றுp மலர் தூவி வணக்கம் செலுத்துகின்ற புனிதமான நிகழ்வு நடைபெற இருக்கின்றது அதற்கு அனைத்து துயிலும் இல்லங்கள் தயாராக இருக்கின்றது
சில துயிலும் இல்லங்களில் இலங்கை இராணுவத்தினர் ஆக்கிரமித்து நிலை கொண்டிருக்கின்ற காரணத்தினால் அங்கு சென்று அஞ்சலி செலுத்தமுடியாத நிலையில் அதற்கு அண்மையில் இருக்கக் கூடிய பகுதிகள் தயார்படுத்தப்பட்டு மக்கள் விளக்கு ஏற்றுவதற்காக அந்தந்த பகுதியில் இருக்க கூடிய பொது அமைப்புக்கள் பொதுமக்கள் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.
இந்த நிகழ்வுகளை குழப்புவதற்கு அரசாங்க தரப்பு தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது வடகிழக்கு முழுவதிலும் அரச புலனாய்வு பிரிவினரது மறைமுகமான அச்சுறுத்தலும் நேரடியான அச்சுறுத்தலும் இராணுவத்தின் நேரடியான குழப்பங்களும் இருந்து கொண்டிருக்கின்ற ஒரு சூழலிலே நேற்று இரவு வாகரை கொக்கட்டிச்சோலை பகுதிகளில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியின் பெயரில் போலியான துண்டுப்பிரசுரம் விநியோகிக்கப்பட்டுள்ளது
மட்டக்களப்பு மாவட்டத்திலே இன்று நடைபெற இருந்த மாவீரர் தினம் தவிர்கமுடியாத காரணத்தினால் இம்பெறாது எனவும் நாளை நடைபெறும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பெயரில் துண்டுபிரசுரம் வெளியிட்டதை வன்மையாக கண்டிக்கின்றோம்.
மாவீரர் தினத்தை குழப்பு விரும்புகின்ற தரப்புக்களால் தான் இது வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாவீர் தினம் நடப்பதற்கு ஆரம்பத்திலே இருந்து தடுப்பதற்கு இலங்கை அரசு இராணுவம், பொலிசார், உளவுத்துறையினர் குழப்பவதிலே தீவிரமாக ஈடுபட்டுக் கொண்டிருக்கின்றனர் மறைமுகமாக மக்களை அச்சுறுத்திக் கொண்டிருக்கின்றனர்.
ஆனதல் சர்வதேச நெருக்கடி காரணமாக இந்தனை தடை செய்ய முடியாத நிலையில் மக்களை திசைதிருப்பு இதனை குழப்புவதற்கான ஒரு முயற்சியிலே இந்த அரசாங்கம் தன்னுடைய எடுபிடிகள் ஊடாக ஈடுபட்டுக் கொண்டுள்ளனா.;
ஆகவே மக்கள் இந்த ஏமாற்று துண்டுபிரசுரங்களுக்கு ஏமாந்து விடக்கூடாது திட்டமிட்டபடி இள்று மாலை 6.05 மணிக்கு மாவீர் துயிலும் இல்லங்களிலும் மாவீரர் நாள் இடம்பெறும.;
எனவே அனைத்து தமிழ் மக்களும் இன்றை அனைத்து கடமைகளை ஒதுக்கிவைத்துவிட்டு இந்த மாவீரர் நாளில் கலந்து கொள்ளுமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கின்றேன.;
மீண்டும் அரசாங்கம் இந்த கோளைத்தனமான கீழ்தரமான வேலைகளை எங்கள் கட்சியின் பெயரில் மிக வன்மையாக கண்டிப்பதுடன் அரசு தமிழ்களின் தேசத்தை அங்கீகரிக்க சுயநிர்ணய உரிமையிலான ஒரு அரசியல் தீர்வை எட்டுவதற்கு முயற்சி செய்வதை விடுத்து இந்த கீழ்தரமான ஈடுபடக்கூடாது என்றார்.