மட்டக்களப்பு கிரான் பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் ஐவர் காயமடைந்துள்ளனர்.
இன்று(27) காலை கரை வலை மீன்பிடிக்கு பயன்படுத்தப்படும் உழவு இயந்திரத்தில் முறக்கொட்டான் சேனை பகுதியில் இருந்து கிரான் நாகவத்தை கடற்கரைப் பகுதிக்கு மீன்பிடிப்பதற்காக ஐவர் உழவு இயந்திரத்தில் சென்ற நிலையில் பின்னால் வந்த பின்னால் வந்த மகிழுந்து உழவு இயந்திரத்துடன் மோதியதில் இவ் விபத்த இடம்பெற்றுள்ளது.
இவ் விபத்தில் முறக்கொட்டன்சேனை தேவாபுரப்பகுதியைச் சேர்ந்த நல்லராசா நேசராசா (வயது 46) ஆறு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.
மகிழுந்து சாரதி மற்றும் உழவு இயந்திரத்தில் இருந்த நான்கு பேர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள்.
மகிழுந்தில் வந்தவர்கள் களுதாவளை ஆலயத்திற்கு பூஜை ஒன்றுக்க வந்துள்ளார்கள் என காவல்துறை விசாரனைகள் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மகிழுந்தின் சாரதி வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு இருவர் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார்கள்.
மேலும் இருவர் மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்த சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
உயிரிழந்தவரின் சடலம் சந்திவெளி பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டு பரிசோதனையின் பின்னர் உறவினர்கள் கையளிப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
வாழைச்சேனை காவல்துறையினர் மேலதிக விசாரணை மேற்கொண்டு வருவதோடு விபத்தில் சிக்கிய மகிழுந்து மற்றும் உழவு இயந்திரம் பகுதி அளவில் சேதமடைந்துள்ளகவும் தெரிவிக்கப்படுகின்றது.