
யாழ்.அளவெட்டிப் பகுதியில் அமைந்துள்ள நரசிங்க வைரவர் ஆலயத்தில் மாவீரர் இறுதி நாளான இன்றைய தினம் (27.11.2022) அன்னதான நிகழ்வு இடம் பெற்றுள்ளது.
உயிரிழந்த மாவீரர்களை நினைவுகூர்ந்து ஆலயத்தில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றுள்ளன.
இதனை தொடர்ந்து அன்னதான நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வினை முன்னாள் வலி.வடக்குப் பிரதேச சபை உறுப்பினர் பிரபாகரன் ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.